'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் 'பொட்டு' படம் தவிர கைவசம் படம் இல்லாத இனியா, தனது சொந்த மொழியான மலையாளத்தில் ஒன்றிரண்டு படங்களில் நடித்து வருகிறார்.. கடந்த மே மாதம் மம்முட்டி நடிப்பில் வெளியான புத்தன் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார் இனியா.
அவர்தான் அதில் கதாநாயகி என்றாலும் மம்முட்டிக்கு அவர் ஜோடியாக நடிக்கவில்லை.. அவ்வளவு ஏன் மம்முட்டிக்கும் அவருக்குமான காட்சிகள் கூட ஒரு சில நிமிடங்கள் தான் இருந்தன.
இதனால் மம்முட்டியுடன் ஜோடியாக நடிக்க முடியவில்லையே என்கிற வருத்தத்தில் இருந்த இனியாவுக்கு தற்போது மீண்டும் மம்முட்டியுடன் இணைந்து நடித்துவரும் 'பரோல்' படம் அந்த மனக்குறையை நீக்கியுள்ளது. ஆம். இந்தப்படத்தில் மம்முட்டியின் மனைவியாக படம் முழுதும் அவருடன் நிறைய காட்சிகளில் இணைந்து நடித்துள்ளாராம் இனியா.