ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். அடுத்த வருடம் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு '2.0' மற்றும் 'காலா' படங்கள் வெளிவர உள்ளன. பல வருடங்களாக ரசிகர்களைச் சந்திக்காத ரஜினிகாந்த் சில மாதங்களுக்கு முன்பு ரசிகர்களைச் சந்தித்து உற்சாகப்படுத்தினார். பிறந்த நாள் சமயத்தில் மீண்டும் ரசிகர்களைச் சந்திக்க உள்ளேன் என கடந்த வாரம் கூறியிருந்தார். இன்னும் இரண்டு வாரங்களில் ரஜினிகாந்தின் பிறந்த நாள் வர உள்ளது.
அன்றைய தினம் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி ஏதாவது அறிவிப்பு ஒன்றை வெளியிடுவாரா என்று ரசிகர்கள் இப்போதே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். திரையுலகத்தில் தனிப் பெரும் நட்சத்திரமாக இருக்கும் ரஜினிகாந்த்தின் திரைப்பட சாதனைகள் சமீபத்தில் 'மெர்சல்' படம் மூலம் முறியடிக்கப்பட்ட போது ரஜினி ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் கடும் மோதல் ஏற்பட்டது. அதோடு, யு டியூப் சாதனையிலும் 'மெர்சல்' படம் கபாலி சாதனையை முறியடித்தது.
ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு அவருடைய ஏதாவது ஒரு அறிவிப்புதான் உற்சாகத்தைக் கொடுக்க வைக்கும். '2.0' பட வெளியீடு பற்றியும் பல்வேறு குழப்பங்கள் நிலவி வரும் நிலையில், டிசம்பர் 12ம் தேதிக்காக ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.