ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தலைப்பைப் பார்த்ததும் பதறிவிட வேண்டாம். சர்ச்சைகளின் நாயகனாக வலம் வரும் திரைப்பிரபலங்களில் இயக்குனர் ராம்கோபால் வர்மாவை மிஞ்சுவதற்கு தென்னிந்தியத் திரையுலகத்தில் யாருமில்லை. யார் என்ன சொன்னாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவரது கருத்துக்களைப் பதிவிட்டுக் கொண்டேயிருப்பார்.
ராம் கோபால் வர்மாவின் புதிய வீடியோ ஒன்றை நடிகை சார்மி அவருடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த வீடியோவில் வீட்டிலுள்ள பெரிய திரையில் வீடியோவில் ஸ்ரீதேவி, சன்னிதியோல் உடன் நடனமாடும் 'சால் பாஸ்' படத்தின் பாடலை ரசித்துக் கொண்டிருக்கிறார். 'வோட்கா'வை அருந்திக் கொண்டே அவர் அந்த பாடலை பார்த்துக் கொண்டிருப்பதில் அதிர்ச்சியடையத் தேவையில்லை.
தன்னை எப்போதுமே ஸ்ரீதேவியின் தீவிர ரசிகன் என சொல்லிக் கொள்பவர் அவர். சமூக வலைத்தளங்களில் பெரும்பாலும் அவர் இரவில்தான் பதிவிடுவார். அப்போது அவரை குடித்துக் கொண்டே பதிவிடுகிறீர்களா எனப் பலர் கேட்டதையும் அவர் கண்டுகொண்டதேயில்லை.
சமூக வலைத்தளங்களில் எதைத்தான் பதிவிடுவது என்பதற்கும் வரைமுறை இல்லாமலே போய்க் கொண்டிருக்கிறது.