கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் |
கோவாவில் நடந்து முடிந்த சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றவர்கள் பற்றிய விபரம் வருமாறு:
2017ம் ஆண்டின் சிறந்த சினிமா பெர்சனாலிட்டி விருது அமிதாப்பச்சனுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த திரைப்படத்திற்காக தங்க மயில் விருது, ராபின் கேம்பிஸ்லோ இயக்கிய 120பிபிஎம் என்ற படத்திற்கு கிடைத்தது.
கனடா இயக்குனர் ஆடம் எகோயனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இந்திய திரைப்பட வளர்ச்சி கழகம் மற்றும் யுனஸ்கோ காந்தி விருது ஷிட்டில் எ ஹொரைஸான் என்ற மராட்டிய திரைப்படத்திற்கு கிடைத்தது.
சிறந்த இயக்குனருக்கான வெள்ளி மயில் விருது ஏஞ்சல்ஸ் வியர் வொய்ட் என்ற சீன படத்தை இயக்கிய விவின் க்யூவிக்கு கிடைத்தது.
சிறந்த நடிகருக்கான வெள்ளி மயில் விருது 120பிபிஎம் படத்தில் நடித்த நேவால் பெரோசுக்கு கிடைத்தது.
சிறந்த நடிகைக்கான வெள்ளி மயில் விருது டேக் ஆப் என்ற மலையாளப் படத்தில் நடித்த பார்வதிக்கு கிடைத்து.
சிறந்த அறிமுக இயக்குனருக்கான வெள்ளி மயில் விருது டார்க் ஸ்கல் என்ற படத்தை இயக்கி கிரோ ரஸேவுக்கு கிடைத்தது.
நடுவர் குழுவின் சிறப்பு விருது டேக் ஆப் மலையாளப்படத்திற்கு கிடைத்தது.