'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் அண்ணனான நடிகர் உதயா, பல படங்களில் நடித்தும் இன்னும் வெற்றியை ருசிக்காமலே இருக்கிறார். அதனாலோ என்னவோ பிரபல இயக்குநர்கள் அவரை கதாநாயகனாக வைத்து படம் எடுக்க தயங்கினார்கள். எனவே தானே தயாரப்பாளராகி ஹீரோவாக நடித்து வருகிறார் உதயா.
தற்போது பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உதயா ஹீரோவாக நடித்து வரும் படம் 'உத்தரவு மகாராஜா. இந்த படத்தில் பிரியங்கா, சேரா, நிஷா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஆஸிப் குரைஷி என்பவர் இயக்கி வருகிறார். சில தமிழ், ஹிந்தி, பெங்காலி மொழிப் படங்களில் உதவி இயக்குநரானப் பணிபுரிந்துள்ளாராம் இவர்.
'உத்தரவு மகாராஜா' முற்றிலும் மாறுபட்ட வகையில் உருவாகி வரும் நகைச்சுவை, ஆக்ஷன் கலந்த சைக்கோ த்ரில்லர் படமாம்! இந்த படத்தில் இயக்குனர் ஆஸிப் குரைஷி ஒரு புதிய முயற்சியை கையாண்டுள்ளாராம். அது என்ன என்பதை உத்தரவு மகாராஜா வெளியிடுவதற்கு ஒருவாரம் முன்பு அறிவிக்க இருக்கின்றனர்.