எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா |
வீரம்', 'வேதாளம்', 'விவேகம்' ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் சிவாவும் அஜித்தும் நான்காவது முறையாக 'விசுவாசம்'படத்தில் இணைகின்றனர். 'விவேகம்' படத்தை தயாரித்த 'சத்யஜோதி ஃபிலிம்ஸ்' நிறுவனமே இந்தப்படத்தையும் தயாரிக்கிறது. விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் துவங்கவிருக்கிறது.
இந்த படத்திற்கான கதாநாயகி, மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது நடந்து வருகிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கவிருக்கிறார். இந்த தகவலை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.
வேதாளம், விவேகம் படத்துக்கு இசையமைத்த அனிருத்துக்கு இப்படத்தில் வாய்ப்பு இல்லை. என்ன காரணம்? விவேகம் படத்துக்கு இசையமைத்தபோது குறிப்பிட்ட காலத்தில் பாடலை கொடுக்காமல் அநியாயத்துக்கு அலையவிட்டிருக்கிறார். அமெரிக்காவுக்கு இசைநிகழ்ச்சி நடத்த வாய்ப்பு வந்ததும் விவேகம் பாடல்களை அவசர அடியாக அடித்துக் கொடுத்தாராம். பின்னணி இசையமைக்கும் போது இன்வால்வ்மெண்ட்டே இல்லாமல் செய்திருக்கிறார். இந்த தகவல் அஜித் காதுக்குப் போனதால் விசுவாசம் படத்திற்கு அவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் அஜித்.