600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
கோவாவில் தற்போது 2017ஆம் வருடத்திற்கான இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) நடைபெற்று வருகிறது. உலகெங்கிலும் பல மொழிகளில் தயாரான படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட்டு வருகின்றன. இந்த திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான வெள்ளிமயில் விருது நடிகை பார்வதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வருடம் மலையாளத்தில் வெளியான 'டேக் ஆப்' என்கிற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் கேரள நர்ஸ்கள் அங்கே உள்நாட்டு யுத்தத்தின் போது சந்தித்த அவலங்களை தனது அருமையான நடிப்பால் வெளிப்படுத்தியிருந்தார் பார்வதி. அதுமட்டுமல்ல, இந்த டேக் ஆப் படத்திற்கு சிறந்த படத்திற்கான ஸ்பெஷல் ஜூரி விருதும் வழங்கப்பட்டுள்ளது.