தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மெர்சல் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த தகவல்தான். விஜய்யின் 62-வது படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் கடைசியில் துவங்குகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கும் மெர்சல் படத்திற்கு இசை அமைத்த ஏ.ஆர்.ரஹ்மானே இசை அமைக்கிறார்.
இப்படம் ஏ.ஆர்.முருகதாஸும், ஏ.ஆர்.ரஹ்மானும் இணையும் இரண்டாவது படம். இவர்கள் இருவரும் ஏற்கெனவே ஹிந்தி கஜினியில் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். இது ஒருபக்கம் இருக்க விஜய் 62 படத்தின் பட்ஜெட் விஷயத்தில் தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இடையில் சின்ன இழுபறி நடப்பதாக தகவல் அடிபடுகிறது.
அதாவது ஸ்டைபர் படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது தான் இந்தப் படம் முடிவாகி அக்ரிமெண்ட் போடப்பட்டது. 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஸ்பைடர் 125 கோடிக்கு பிசினஸ் செய்யப்பட்டதன் அடிப்படையில் விஜய் 62 படத்தை 125 கோடியில் பர்ஸ்ட்காப்பி அடிப்படையில் எடுத்துத்தருவதாக சொன்னார் ஏ.ஆர்.முருகதாஸ்.
அதன்அடிப்படையில் அக்ரிமெண்ட் போடப்பட்டநிலையில், ஸ்பைடர் படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. இதன் காரணமாக விஜய் 62 படத்தை 100 கோடி பட்ஜெட்டில் எடுத்துக்கொடுக்கும்படி முருகதாசிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.