அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
சீயான் விக்ரம் நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வரும் படம் ஸ்கெட்ச். அந்த படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்து விட்ட விக்ரம், தற்போது சாமி-2 படத்தில் அதிரடியான ஆக்சன் காட்சிகளில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார்.
மேலும், ஸ்கெட்ச் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். ஆனால் இந்த படத்தில் முதலில் காஜல்அகர்வாலைதான் நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினாராம் விக்ரம். காரணம், இதுவரை அவர் படங்களில் காஜல்அகர்வால் நடித்ததில்லை. அதனால்தான் ஸ்கெட்சில் அவருடன் டூயட் பாட ஆசைப்பட்டிருக்கிறார்.
ஆனால் அதையடுத்து ஸ்கெட்ச் படக்குழு காஜல்அகர்வாலை அணுகியபோது, அஜீத்தின் விவேகம், விஜய்யின் மெர்சல் படங்களில் காஜல்அகர்வால் பிசியாக இருந்திருக்கிறார். அதனால் இவர்கள் கேட்ட தேதியில் கால்சீட் இல்லையென்று கைவிரித்து விட்டாராம். அதன்பிறகுதான் காஜல்அகர்வால் வேடத்திற்கு தமன்னாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். ஆக, காஜல்அகர்வாலுடன் டூயட் பாட வேண்டும் என்கிற விக்ரமின் ஆசை நிராசையாகி விட்டது.