Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'2.0' டீசர் அறிவிப்பு என்ன ஆயிற்று ?

28 நவ, 2017 - 13:07 IST
எழுத்தின் அளவு:
What-happend-about-2.O-Teaser?

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் '2.0'. இப்படத்தின் இசை வெளியீடு அக்டோபர் மாதத்திலும், டீசர் வெளியீடு நவம்பர் மாதத்திலும், டிரைலர் வெளியீடு டிசம்பர் மாதத்திலும் நடைபெறும் என லைகா நிறுவனத்தின் ராஜு மகாலிங்கம் செப்டம்பர் மாதம் 7ம் தேதியன்று அவருடைய டுவிட்டர் தளம் மூலம் அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி, கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதைக் கடந்த வாரம் டிவியிலும் ஒளிபரப்பினார்கள். ஆனால், துபாய் விழாவும் சரி, டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியும் சரி ரசிகர்களிடம் சரியாகச் சென்று சேரவில்லை.

நவம்பர் மாதம் ஐதராபாத்தில் டீசர் வெளியீட்டு விழா நடக்கும் என்று முன்னர் அறிவித்தபடி இதுவரை அதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. நவம்பர் மாதம் முடிய இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. இன்டர்நேஷனல் படம் என்று இசை வெளியீட்டு விழாவில் சொல்லிக் கொண்ட குழுவினர் நவம்பர் மாதம் டீசர் வருமா, வராதா என்பது குறித்து இதுவரை முறையாக அறிவிக்கவில்லை. நவம்பர் மாதம் வெளியாகவில்லை என்றால் அதை அனைவருக்கும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதுதானே நல்லது.

டீசர் வெளியீட்டு விழா பற்றியே இதுவரை எதுவும் வெளியிடப்படாத நிலையில், அதுபோல, டிசம்பர் மாதத்தில் சென்னையில் டிரைலர் வெளியீட்டு விழா நடக்குமா என்பதும் சந்தேகம்தான்.

அதே சமயம், 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் தேதி முன்னர் அறிவித்தபடி படம் வெளிவருமா என்பது குறித்தும் கடந்த சில வாரங்களாகவே சந்தேகம் எழுந்து வருகிறது.

ஒரு பெரிய நிறுவனம், பெரிய இயக்குனர், பெரிய நடிகர்கள், பெரிய இசையமைப்பாளர் ஆகியோர் பணியாற்றும் ஒரு இன்டர்நேஷனல் படம் பற்றி முறையான தகவல் ரசிகர்களுக்குச் சென்று சேராதது வியப்பளிப்பதாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in