ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரையுலகில் சாட்டிலைட் டிவிக்கள் வருவதற்கு முன்பாக தூர்தர்ஷன் தொலைக்காட்சியிலும், வெளிநாடுகளில் உள்ள தொலைக்காட்சிகளிலும் மட்டுமே திரைப்படங்களின் உரிமை விற்கப்பட்டு ஒளிபரப்பப்படும். அதற்கு சில லட்சங்கள் மட்டுமே அதிகபட்சமாக கிடைக்கும்.
அதன் பின் சாட்டிலைட் டிவிக்கள் வந்ததும் சில லட்சங்கள், பல லட்சங்களாகியது. அதுவும் நான்கைந்து டிவிக்கள் இருந்த வரை மட்டுமே. பின்னர் பல டிவிக்கள் வந்த பிறகு லட்சங்கள் கோடிகளாக, கோடிகளும் பல கோடிகளாகின. ஆனால், திடீரென கடந்த சில வருடங்களாக சாட்டிலைட் டிவிக்களுக்கான உரிமை அதிக விலைக்கு விற்ககப்படுவதில்லை. டிவி நிறுவனங்களும் வெற்றி பெற்ற படங்களையும், பெரிய நடிகர்களின் படங்களையும் மட்டுமே வாங்க ஆரம்பித்தன. அதனால், அந்த மார்க்கெட் பெரிய வீழ்ச்சியைக் கண்டது. அது தயாரிப்பாளர்களுக்கும் நெருக்கடியைத் தந்தது.
கடந்த வருடத்திலிருந்து யு டியுப் ஒளிபரப்பு உரிமை, மொபைல் ஒளிபரப்பு உரிமை ஆகியவை உள்ளடங்கிய டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமை தனியாக பெரிய விலைக்கு வாங்கப்பட்டன. அமேசான், நெட்பிளிக்ஸ், சன் நெக்ஸ்ட் போன்ற 'மொபைல் ஆப்' மூலம் படங்களைப் பார்க்கும் முறைக்கு அமோக வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தன. சமீப காலங்களில் சாட்டிலைட் உரிமைகளை விட இந்த டிஜிட்டல் உரிமை அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
தற்போது ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிக்க ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் '2.0' படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. படத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி சாட்டிலைட் உரிமையை ஜீ டிவி நிறுவனம் ஏற்கெனவே 110 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. பட வெளியீட்டிற்கு முன்பாகவே '2.0' படத்தின் தயாரிப்புச் செலவான 400 கோடி ரூபாயை அந்நிறுவனம் பெற்றுவிடும் என எதிபார்க்கப்படுகிறது.