தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “பொட்டு“ இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ் ராம், ஷாயாஜி ஷிண்டே, மன்சூரலிகான் ஆகியோர் நடிக்கிறார்கள். இனியன் ஹரீஷ் ஒளிப்பதிவு செய்கிறார். அம்ரீஷ் இசை அமைக்கிறார். வடிவுடையான் இயக்குகிறார்.
மருத்துவம் படிக்க வரும் ஒரு மலைவாழ் பெண்ணான இனியா மருத்துவக் கல்லூரியில் கொலை செய்யப்படுகிறாள். அங்கு படிக்கும் பரத் உடலுக்குள் புகுந்து தன் சாவுக்கு காரணமானவர்களை இனியா பழிவாங்குகிற கதை. பரத் காதலியாக சிருஷ்டி டாங்கே நடித்திருக்கிறார். பெண் அகோரியாக நமீதா நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் தெலுங்கு உரிமத்தை என்.கே.ஆர் பிலிம்ஸ் நிறுவனம், ஒரு கோடி கொடுத்து வாங்கியிருக்கிறது. தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.