இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
டாக் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் அம்மணி, சவாரி படங்களை தயாரித்தவர் வெண் கோவிந்தா. இவர் இப்போது கறிச்சோறு என்ற படத்தை தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார். இவர்கள் தவிர ராதாரவி, வையாபுரி, அஸ்வின், மைம்கோபி, போஸ் வெங்கட், டேனியல் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் என அத்தனை பொறுப்புகளையும் விஜி வென்ஜி என்ற புதுமுக இயக்குனர் ஏற்றுள்ளார், கதவும் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்கிறார், சிவா பத்மநாபன் இசை அமைத்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் பூஜையுடன் நேற்று தொடங்கியது. படத்தை வேகமாக முடித்து வருகிற ஏப்ரலில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.