பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
விஜய் நடித்த உதயா, அழகிய தமிழ் மகன் படங்களுக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான், அதன்பிறகு 10 வருடங்களுக்குப்பிறகு மெர்சல் படத்திற்கு இசையமைத்தார். அந்த படத்தில் இடம்பெற்ற ஆழப்போகிறான் தமிழன் என்ற பாடல் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. அந்த படமும் வெற்றி பெற்ற நிலையில், அடுத்தபடியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார் விஜய்.
தனது 62வது படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கயிருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தில் நயன்தாரா, ரகுல்பிரீத் சிங் போன்ற நடிகைகள் நாயகியாக நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் இசையமைப்பது யார் என்பது சஸ்பென்சாக உள்ளது.
தற்போது கிடைத்துள்ள தகவல்படி மெர்சல் படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானே மீண்டும் விஜய் படத்திற்கு இசையமைக்கிறாராம். இன்னும் ஏ.ஆர்.ரஹ்மான் படத்தில் அதிகாரப் பூர்வமாக இணையவில்லை என்றபோதும், பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்கிறார்கள்.