'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கமல்ஹாசன் தொடர்பான ஒரு பரபரப்பான வீடியோ நேற்று இணைய தளங்களில் வெளியாகி வைரலாக பரவியது. ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு வெளியே வந்த கமலை, இயக்குனரும் நடிகருமான ரமேஷ் அரவிந்த் அழைத்து வருகிறார். ரசிகர்கள் கூடி நின்று கோஷம் எழுப்புகிறார்கள். அங்கிருக்கும் படிக்கட்டில் கமல் இறங்கும்போது ஒரு ரசிகர் முண்டியடித்துக் கொண்டு சென்ற கமலின் காலில் விழ முயற்சிக்கிறார். கோபமுற்ற கமல் அந்த ரசிகரின் கன்னத்தில் அறைந்து விட்டுச் செல்கிறார். அல்லது கையால் அவரை தள்ளிவிட்டுச் செல்கிறார். இது வீடியோவில் இருக்கும் காட்சி.
இந்த வீடியோ சில மாதங்களுக்கு முன்பு பெங்களூர் நிகழ்ச்சி ஒன்றின் போது செல்போனில் எடுக்கப்பட்டது என்று தெரிகிறது. அதை இப்போது ஏன் வெளியிட்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இதுகுறித்து கமல் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், "காலில் விழும் கலாச்சாரத்தை அடியோடு வெறுப்பவர் கமல். அதனால் காலில் விழுந்த ரசிகரை கோபத்துடன் அவர் தள்ளிவிட்டிருக்கலாம். அடித்திருக்க வாய்ப்பில்லை" என்கிறார்கள் கமலின் அபிமானிகள்.
இருந்தாலும், வீடியோ பரபரப்பாக பரவிக் கொண்டிருக்கிறது.