ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ஷாகித் கபூர், ரன்வீர் சிங் ஆகியோர் நடித்துள்ள படம் பத்மாவதி. கடும் எதிர்ப்புக்கள் காரணமாக, டிசம்பர் 1 ம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டிருந்த பத்மாவதி படம் தள்ளிவைக்கப்பட்டது. படத்தை எப்போது ரிலீஸ் செய்ய உள்ளனர் என்ற புதிய தேதியும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், இந்த படத்தை ஜனவரி 26 ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து பத்மாவதி படக்குழு வட்டாரங்கள் கூறுகையில், இரு மாநில தேர்தல் முடியும் வரை நாங்கள் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க போவதில்லை. ஒருவேளை, படத்தின் ரிலீஸ் பற்றி நீங்கள் உடனடியாக தெரிந்து கொள்ள விரும்பினால், ஜனவரிக்கு முன் நாங்கள் அறிவித்து விடுவோம்.
ஜனவரி மாதத்தை பொறுத்தவரை ரிலீசாகும் படங்களில் பத்மன் படம் மட்டுமே பெரியது. அதனால் பத்மாவதி படத்தை ரிலீஸ் செய்ய ஜனவரி சரியான நேரமாக இருக்கும். அதற்குள் இந்த பிரச்னைகளை முடித்து, சென்சார் போர்டின் சான்றையும் பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என கூறப்பட்டுள்ளது.