ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் துப்பறிவாளன் படத்தில் நடித்தவர் மலையாள நடிகை அனு இம்மானுவேல். நிவின்பாலி நடித்த 'ஆக்சன் ஹீரோ பிஜூ' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர், அதன்பின் துல்கர் சல்மான், விக்ரம் பட வாய்ப்புகளை நூலிழையில் கோட்டை விட்டார்.. ஆனால் அதேசமயம் அதை ஈடுகட்டும் விதமாக தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
தெலுங்கில் இவர் நடித்த 'மஞ்சு' படம் ஹிட்டாகி, அடுத்து இவரை பவன் கல்யாண் படத்தில் அவருக்கு ஜோடியாக்கி அதிர்ஷ்ட கிரீடம் சூட்டியது.. அதை தொடர்ந்து ஸ்டைலிஷ் ஸ்டாரான அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக 'நா பேரு சூர்யா' படத்தில் கதாநாயகியாக மாறினார். இப்போது மாருதி இயக்கத்தில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.