'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
பத்மாவதி படம் காரணமாக கடும் எதிர்ப்புக்கள் மற்றும் சர்ச்சையில் சிக்கி உள்ள அப்படத்தின் டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு பல்வேறு பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தற்போது நடிகை ராணி முகர்ஜியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற அவரிடம், சஞ்சய் லீலா பன்சாலியை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், சஞ்சய் லீலா பன்சாலி ஒரு திறமையான இயக்குனர். அவர் செய்தது சரி தான் அவருக்கு நன்றாக தெரியும். அதனால் அவருக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை. அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் நான் அவர் பக்கம் தான் நிற்பேன் என அவருக்கு நன்றாக தெரியும். இதனை நான் லவுட் ஸ்பீக்கர் வைத்து அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.
நடிகை ராணி முகர்ஜி, சஞ்சய் லீலா இயக்கிய பிளாக் என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.