ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் ஆண்டனி நடித்த படங்கள் தமிழைப்போலவே தெலுங்கிலும் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, பிச்சைக்காடு என்ற பெயரில் தெலுங்கில் வெளியான பிச்சைக்காரன் படம் தமிழை விடவும் கூடுதலாக வசூலித்ததாக சொல்கிறார்கள். அதனால் இப்போது விஜய் ஆண்டனியின் வியாபார வட்டம் தெலுங்கு சினிமா வரை விரிவடைந்து விட்டது.
அதன்காரணமாக தற்போது அவர் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடித்துள்ள அண்ணாதுரை படம் தெலுங்கில் இந்திரசேனா என்ற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தின் டிரெய்லரை தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியை வைத்து வெளியிட்டு தெலுங்கில் படத்திற்கான விளம்பரத்தில் பரபரப்பு ஏற்படுத்தினர். மேலும், நவம்பர் 30-ந்தேதி வெளியாகும் அண்ணாதுரை படம், தெலுங்கிலும் அதே நாளில் வெளியாகிறது.
இந்தநிலையில், சில தினங்களுக்கு முன்பு தணிக்கைக்குழு பார்வைக்கு அனுப்பப்பட்டிருந்த இந்திரசேனா படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.