பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாகுபலி-2 படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹோ. தமிழ், தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக இந்தி நடிகை ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். நீல்நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார். இவர்கள் தவிர மேலும் சில பிரபல இந்தி நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.
மேலும், இந்த படத்தின் செட்டில் ஒரு மாஸ்டரை நியமித்து தனக்கான டயலாக்குகளை தெலுங்கு, தமிழில் பயிற்சி எடுத்து நடித்து வருகிறார் ஸ்ரத்தா கபூர். அதோடு, படப்பிடிப்பு தளத்தில் உள்ளவர்களிடம் தெலுங்கில் பேசி பயிற்சி எடுத்து வரும் அவர், இந்த சாஹோ படத்தில் தனக்குத்தானே டப்பிங் பேசப்போகிறாராம். அதனால் இப்போதே தான் பேச வேண்டிய வசனங்களை முன்பே வாங்கிச்சென்று மாஸ்டர் முலம் பயிற்சி எடுத்து நடித்துக்கொண்டிருக்கிறார் ஸ்ரத்தா கபூர்.