தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
காற்று வெளியிடை, இவன் தந்திரன், விக்ரம் வேதா ஆகிய படங்களில் நடித்தவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். இதில் விக்ரம் வேதா படத்தில் மாதவனின் மனைவியாக நடித்திருந்தார். அதையடுத்து, நிவின்பாலிக்கு ஜோடியாக ரிச்சி படத்தில் நடித்திருக்கிறார் ஸ்ரத்தா ஸ்ரீநாத். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.
இதுபற்றி ஸ்ரத்தா ஸ்ரீநாத் கூறுகையில், தமிழில் நான் கமிட்டான முதல் படம் ரிச்சி. இரண்டு வருடங்களுக்கு முன்பே கமிட்டாகி நடித்தேன். ஆனால் அந்த படம் இப்போதுதான் திரைக்கு வருகிறது. அதையடுத்து நான் நடித்த மூன்று படங்களும் ரிலீசாகி விட்டன. விக்ரம் வேதா படத்தைப்போன்று ரவுடிசம் கலந்த கதையில் இந்த ரிச்சி படமும் தயாராகியிருக்கிறது.
இதில் ஒரு பத்திரிகை நிருபராக நான் நடித்திருக்கிறேன்.சில ரவுடிகளை சந்தித்து பேட்டி எடுப்பேன். அப்போது ரவுடியான நிவின்பாலியை சந்திப்பேன். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை. அந்த வகையில், விக்ரம் வேதா படத்தை அடுத்து இந்த படத்திலும் ரவுடிசம் கலந்த கதையில் நடித்திருக்கிறேன். அதனால் அந்த படம் போன்று இந்த படமும் எனக்கு வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் ஸ்ரத்தா ஸ்ரீநாத்.