'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சக்தே படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் நடிகை சகாரியா காக்தே. தொடர்ந்து பாலிவுட்டிலும், மராத்தி படங்களிலும் நடித்தவர், இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கானை காதலித்து வந்தார். இருவீட்டாரின் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. தொடர்ந்து நேற்று இவர்கள் இருவருக்கும் சிறப்பான முறையில் திருமணம் நடந்தது. சகாரியா ஆரஞ்ச் நிற பட்டுப்புடவை அணிந்திருந்தார். ஜாகிர் கான், பிங்க் கலரில் குர்தா அணிந்திருந்தார். இந்த திருமணத்தில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே பங்கேற்றனர். வருகிற 27-ம் தேதி மும்பையில் வரவேற்பு நடக்கிறது. இதில் பாலிவுட் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.