ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
வீரம், வேதாளம், விவேகம் படங்களைத் தொடர்ந்து அஜித்துடன் நான்காவது முறையாக இயக்குநர் சிவா இணையவிருக்கிறார் என்ற தகவல் பல வாரங்களாகவே அடிபட்டு வந்தது.
இந்நிலையில், அந்த செய்தி தயாரிப்பாளர் தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'விவேகம்' படத்தைத் தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே இந்தப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு 'விசுவாசம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் துவங்குகிறது. தீபாவளியன்று படத்தை ரிலீஸ் செய்யவிருப்பதாக தயாரிப்பாளர் டி.தியாகராஜன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
வீரம், வேதாளம், விவேகம் படங்களைத் தொடர்ந்து தற்போது 'விசுவாசம்' என்று டைட்டில் வைத்திருப்பதன் மூலம் ஆங்கில எழுத்தான 'V'யில் துவங்கும் பெயரை சூட்டும் இயக்குநர் சிவாவின் சென்ட்டிமெண்ட் இதிலும் தொடர்கிறது.
வீரம் படத்தைப் போல் கிராமப் பின்னணியில் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.