'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ராய் லட்சுமி நடித்துள்ள ஹிந்திப் படம் ஜூலி 2. இந்தியில் தயாராகி உள்ள இந்தப் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு இன்று வெளியாகி உள்ளது. இது ஒரு பிரபல நடிகையின் கதை என்று சொல்லப்படுகிறது.
சமீபத்தில் இந்தப் படம் பற்றி நிருபர்களுக்கு பேட்டி அளித்த ராய் லட்சுமி. "இது ஒரு நடிகையின் கதைதான். ஆனால் சிக்ஸ் ஸ்மிதாவின் கதையல்ல. இப்போதும் நம்முடன் இருக்கும் ஒரு நடிகையின் கதை" என்று கூறியவர் ஒரு சின்ன க்ளுவும் கொடுத்தார். "அந்த நடிகையின் தங்கை தமிழ்நாட்டு மருமகள்" என்றார். அப்படியானால் அது நக்மா தான் என்று சினிமா பார்வையாளர்கள் முடிவு செய்தார்கள்.
இது தொடர்பாக பலரும் நக்மாவை தொடர்பு கொண்டு கேட்டார்கள். அதற்கு பதில் அளித்த நக்மா "நீங்கள் சொல்வது ஆச்சர்யமாக இருக்கிறது. எனக்கு அப்படி எந்த ஒரு தகவலும் வரவில்லை. ஒரு படத்தை பார்க்காமலேயே கருத்து சொல்ல முடியாது. என் கதையை படமாக்க யாரும் என்னிடம் அனுமதி கேட்கவில்லை. அதனால் அது என் கதையாக இருக்க வாய்ப்பில்லை. படம் வெளிவந்ததும் படத்தை பார்ப்பேன். அது என் கதையாக இருந்தால் அதற்கு சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வேன்" என்று கூறியிருக்கிறார் நக்மா.