ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
குஜராத்தை சேர்ந்த நமீதா தெலுங்கு படத்தில் அறிமுகமாகி, எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு ஏய் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்தார். இங்கிலீஸ்காரன், சாணக்யா, பம்பரக்கண்ணாலே, தகப்பன்சாமி, வியாபாரி, நான் அவனில்லை, அழகிய தமிழ் மகன், ஜகன் மோகினி உள்பட பல படங்களில் நடித்தார்.
தமிழில் கவர்ச்சி நடிகையாக அடையாளப்படுத்தப்பட்ட நமீதா, ரசிகர்களை மச்சான்ஸ் என்று அழைத்து அவர்களுடன் நெருக்கமானார். பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் கடை திறப்பு விழா, திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பிசியாகவே இருந்தார்.
கடைசியாக வீரேந்திர சவுத்ரி என்பவர் தயாரித்து, ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்தார். அப்போது வீராவுக்கும், நமீதாவுக்கும் காதல் உருவானது. நீண்ட நாள் காதலுக்கு பிறகு இருவரும் திருணமம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கு இரு வீட்டாரும் சம்மதித்தனர்.
நமீதா, வீரா திருமணம் இன்று அதிகாலை 5.30 மணிக்கு திருப்பதியில் உள்ள தாமரை கோவில் என்று அழைக்கப்படும் இஸ்கான் கோவிலில், குஜராத்தி இந்து முறைப்படி திருமணம் நடந்தது. சரத்குமாரும், ராதிகாவும் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்த்தி, ஹரிஷ் கல்யாண், ஷக்தி வாசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.