மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? |
மலையாள திரையுலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார்களாக விளங்கும், மோகன் லால், மம்மூட்டிக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார், நிவின் பாலி. இவர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து வசூலை குவிப்பதால், தயாரிப்பாளர்கள், அவரையே தேடிச் செல்கின்றனர்.
தமிழில், நேரம் என்ற படத்தில் அவர் நடித்திருந்தாலும், அந்த படம், மலையாளத்தில் தயாரானது. எனவே, அவர் நடிக்கும், முதல் நேரடி தமிழ் படம் என்ற பெருமை, ரிச்சிக்கு கிடைத்துள்ளது. விக்ரம் வேதா படத்தில், மாதவனின் மனைவியாக நடித்த ஸ்ரத்தா ஸ்ரீநாத் தான், ரிச்சியில், நிவின் பாலிக்கு ஜோடி.
19ம் நுாற்றாண்டில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, காயம்குளம் கொச்சுண்ணி என்ற படம் மலையாளத்தில் தயாராகிறது. இதில், வித்தியாசமான வேடத்தில், நிவின் பாலி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக, அமலாபால் நடிக்கிறார். 'இந்த படம், என் திரையுலக வாழ்வில் திருப்புமுனையாக அமையும்' என்கிறார், நிவின் பாலி.