பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சினிமாத்துறையே சென்ட்டிமெண்ட் வியாதியில் பீடித்திருக்கிறது என்று சொல்லப்படுவது உண்மைதான் போலிருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா இணைந்து நடித்த படம் 'தேவி'. ஹாரர் படங்களில் சற்றே வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை சின்ன பட்ஜெட்டில் எடுத்தனர். அதனால் சுமாராக ஓடியநிலையிலேயே ஓரளவு லாபம் கொடுத்தது.
தேவி படத்தைத் தொடர்ந்து ஏ.எல்.விஜய்யும், பிரபுதேவாவும் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள் என்ற தகவல் ஏற்கெனவே வெளியானது. தற்போது சாய் பல்லவி நடிப்பில் 'கரு' என்ற படத்தை இயக்கி வரும் ஏ.எல்.விஜய் இந்த படம் வெளியானதும் பிரபுதேவா நடிக்கும் படத்தை இயக்குகிறார்.
பிரபு தேவாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இந்த படத்திற்கு 'லட்சுமி' என்று டைட்டில் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பூஜை முறைப்படி இன்று(நவ., 23) ஆரம்பமானது.