ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அஜித் - சிவா கூட்டணி நான்காவது முறையாக இணையும் படத்திற்கு விசுவாசம் என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.
வீரம், வேதாளம் படங்களை தொடர்ந்து விவேகம் படத்தில் அஜித் - சிவா கூட்டணி இணைந்தது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பு பெறவில்லை. சிவா, அஜித் கூட்டணி இனி வேண்டாம் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் குரல் கொடுத்தனர். இருப்பினும் நான்காவது முறையாக இவர்கள் இணைவார்கள் என செய்திகள் வெளியான நிலையில் இப்போது இந்த கூட்டணி உறுதியாகி இருக்கிறது.
படத்திற்கு "விசுவாசம்" என்று தலைப்பிட்டுள்ளார்கள். விவேகம் படத்தை தயாரித்த சத்ய ஜோதி பிலிம்ஸே தயாரிக்கிறது. ஹீரோயின் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. ஜனவரி மாதம் படத்தை ஆரம்பிக்கிறார்கள். 2018, தீபாவளி தினத்தில் படம் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது.