ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்கில் பிடா படத்தை அடுத்து சாய் பல்லவி நடித்துள்ள படம் எம்சிஏ. நானி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வந்த நிலையில், டிசம்பர் 15-ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது இறுதிகட்ட பணிகள் முடிவடையாததால் ரிலீஸ் தேதியை டிசம்பர் 21-ம் தேதிக்கு மாற்றி வைத்துள்ளனர்.
ஆனால், டிசம்பர் 22-ந்தேதி நாகார்ஜூனாவின் இளைய மகன் அகில், விக்ரம் குமார் இயக்கத்தில் நடித்துள்ள ஹலோ படத்தை வெளியிடயிருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். ஆனால் இப்போது அதற்கு ஒருநாள் முன்னதாக நானி படம் வெளியிடயிருப்பதாக அறிவித்திருக்கிறார். இருப்பினும் அகில் படம் பின்வாங்கவில்லை. நானியுடன் மோத தயாராகி விட்டனர். ஆக, தனது இரண்டாவது படத்திலேயே ஒரு முன்னணி நடிகர் படத்துடன் தைரியமாக மோதுகிறார் அகில் அக்கினேனி.