பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட சில நடிகர்கள் அரசியல் களத்தில் நின்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு ரஜினி, கமல் என பல நடிகர்களும் அரசியலில் பிரவேசிக்க தயாராகி வருகிறார்கள்.
விஜய்யும் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவார் என்கிற சூழல் இருந்த வரும் நிலையில், அஜித்தும் அரசியலுக்கு வர திட்டம் தீட்டிக் கொண்டிருப்பதாக சென்னையில் நடைபெற்ற விசிறி படத்தின் ஆடியோவில் கலந்து கொண்ட நடிகர் ஆரி கூறினார்.
அவர் கூறும்போது, விஜய்யை பற்றி நம்ம எல்லோருக்கும் தெரியும், ஆனால் அஜித்தை பற்றி ஒரு விஷயம் சொல்ல போகிறேன். அவர் அரசியலுக்கு வரமாட்டார். ஆனால் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான ஒட்டுமொத்த வரைபடத்தை வைத்து நலத்திட்டங்களை தீட்டி வருகிறார். வெளிநாடுகளுடன் ஒப்பிட்டு, தமிழகத்தை எப்படியெல்லாம் வளர்ச்சி அடைய செய்யலாம் என்று ஆலோசித்து வருகிறார். அஜித்துக்கு நெருங்கிய நணபர் ஒருவர் என்னிடம் சொன்னார் என்றார்.