விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
தெலுங்கு நடிகர் மோகன்பாபு நடித்துள்ள படம் காயத்ரி. ஜூலை 27-ந்தேதி படப்பிடிப்பு தொடங்கப்பட்ட இந்த படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்திற்கான கதையை ரத்னபாபு எழுத, மதன் படத்தை இயக்கியிருக்கிறார். மோகன்பாபுவுடன் மஞ்சு விஷ்ணு, அனுசுயா, மலையாள நடிகை நிகிலா விமல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதுவரை நடிக்காத ஒரு வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார் மோகன்பாபு. அவரது அனுபவம், வயது அனைத்தையும் கருத்தில் கொண்டு அவருக்கு ஒரு மாறுபட்ட வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். அதனால் இந்த காயத்ரி படத்தில் நான் புதிய அவதாரம் எடுக்கிறேன் என்று கூறி வருகிறார் மோகன்பாபு.
தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் காயத்ரி படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று இரவு 10 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.