தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் விவேகம், மெர்சல் படங்களுக்குப்பிறகு ஹிந்தி குயின் படத்தின் தமிழ் ரீமேக்கான பாரீஸ் பாரீஸ் என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார் காஜல் அகர்வால். அதேபோல் தெலுங்கில் ராணாவுடன் நடித்த நேனே ராஜூ நேனே மந்திரி படத்தில் நாயகியாக நடித்த காஜல், தற்போது கல்யாண் ராமுடன் எம்எல்ஏ என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.
பாரீஸ் பாரீஸ் படத்திற்காக பாரீஸில் முகாமிட்டிருக்கிறார் காஜல்அகர்வால். அங்கு படமாக்க வேண்டிய அனைத்து காட்சிகளையும் முடித்த பிறகுதான் இந்தியா திரும்புகிறார்களாம். இந்த படத்திற்காக கொடுத்த கால்ஷீட் நாட்களை விட அதிகப்படியான நாட்களை கொடுத்து நடிக்கிறாராம் காஜல் அகர்வால்.
இதனால் தெலுங்கில் கல்யாண்ராமுடன் நடிக்க கமிட்டாகியிருக்கும் எம்எல்ஏ படத்திற்கு கொடுத்திருந்த கால்சீட் தேதியில் மாற்றம் செய்து விட்டாராம் அதன்காரணமாக, எம்எல்ஏ படத்தின், படப்பிடிப்பு தேதியை மாற்றி வைத்து காஜலின் வருகைக்காக அப்படக்குழு வெயிட்டிங்கில் உள்ளது.