‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
நடிகர் ஆர்யா நேற்று அவருடைய டுவிட்டர் பதிவில் அவரைத் திருமணம் செய்து கொள்ள விருப்பமுள்ளவர்களுக்கு ஒரு தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஆர்யாவின் இந்த அறிவிப்பை எந்த விதத்தில் நம்புவது என்பது குறித்து பலருக்கும் சந்தேகமாக இருக்கிறது.
ஆர்யாவின் நெருங்கிய நண்பரான நடிகர் ஜெயம் ரவி கூட நடிகர் சித்தார்த்துக்கு அளித்துள்ள ஒரு பதிலில், “அவன நம்பாதே மச்சி” எனக் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் திரைக்குப் பின்னாலும் காதல் மன்னனாக இருப்பவர் ஆர்யா என்பதை அவருடன் நடித்த பலர் திரைப்பட விழாக்களில் பொது மேடைகளில் ஏற்கெனவே அறிவித்திருக்கிறார்கள். ஆனால், இப்போது திடீரென ஆர்யா இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருப்பது ஆச்சரியமளிப்பதாகவே உள்ளது.
ஆர்யா முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர். அப்படியிருக்க அவர் மற்ற மதத்துப் பெண்களைத் திருமணம் செய்து கொள்வாரா என்பதும் சந்தேகம் தான். அவருடைய குடும்பத்தினர் அதற்கு சம்மதிக்க வேண்டும். இதையெல்லாம் மீறி 'மாப்பிள்ளை ஆர்யா' என்ற பெயரில் ஒரு இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது.
அதில் ஆர்யாவைத் திருமணம் செய்து கொள்ள விரும்பும் பெண்கள் அவர்களைப் பற்றிய பயோடேட்டா, மற்றும் வீடியோக்களை பதிவு செய்யவும் வழி செய்யப்பட்டுள்ளது. அந்த இணையதளம் மும்பையின் பிரபல தயாரிப்பு நிறுவனமான 'வியாகாம் 18 மீடியா' பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பிரபலமான ஒரு படத் தயாரிப்பு நிறுவனம் இப்படி நடிகர்களுக்காக 'மேட்ரிமோனி' இணையதளங்களையும் எப்போது உருவாக்க ஆரம்பித்தது என்று தெரியவில்லை.
இதையெல்லாம் பார்க்கும் போது ஜெயம் ரவி சொல்வது போல 'அவன நம்பாதே' என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.