ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கன்னடத்து பொண்ணு ரெபே மோனிகா ஜான். மாடலிங் துறையில் இருந்த இவர் மலையாளத்தில் வினித் சினிவாசன் இயக்கத்தில் நிவின் பாலி நடித்த ஜேக்கப்பிண்ட சுவராஜ்யம் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார். தற்போது பப்பின் சுவற்றில் பிரணயம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தமிழுக்கு வருகிறார் ரெபே மோனிகா. தில்லுக்கு துட்டு படத்தை இயக்கிய ராம்பாலா இயக்கும் அடுத்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார். படத்தின் பெயர் டாவு. ஜோடியாக நடிப்பவர் கயல் சந்திரன். இவர்கள் தவிர முனிஷ்காந்த், லிவிங்ஸ்டன், ஊர்வசி, மனோபாலா, உள்பட பலர் இதில் நடிக்கிறார்கள். சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார் தீபக் பதி ஒளிப்பதிவு செய்கிறார்.
"படத்துக்கு பொருத்தமான ஹீரோயின் தேடி அலைந்தோம். அறிமுகமான முகமாக இருக்ககூடாது. அழகான முகமாக இருக்க வேண்டும் என்று தேடினோம். அப்போது தான் ஜேக்கப்பிண்ட பிரதிகாரம் படத்தை பார்க்க நேர்ந்தது. எங்கள் கேரக்டருக்கு ரெபோ மோனிகா பொருத்தமாக இருந்தார். அவரிடம் கதை சொன்னோம் உடனே ஒப்புக் கொண்டார்" என்கிறார் இயக்குனர் ராம்பாலா.