Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பத்மாவதி எதிர்ப்பு : வீட்டுக்குள் முடங்கிய தீபிகா

22 நவ, 2017 - 11:49 IST
எழுத்தின் அளவு:
Deepika-cancel-her-programs-over-Padmavati-row

தீபிகா படுகோனே நடித்த பத்மாவதி படம் கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. அதில் நடித்த நடிகை தீபிகா படுகோனேவை உயிருடன் கொளுத்துங்கள் என்றும், அவர் தலைக்கு 10 கோடி பரிசு அறிவித்தும் சில மதவாத அமைப்புகளின் பிரதிநிதிகள் பேசி வருகிறார்கள். மாநில அரசுகள் படத்தை தடை செய்து வருகிறது. இதனால் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கும் தீபிகா தனது நிகழ்ச்சிகள், படப்பிடிப்புகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டு வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்.

ஐதராபாத்தில் வருகிற 28ந் தேதி பிரதமர் நரேந்திரமோடி துவக்கி வைக்க இருக்கும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் தீபிகா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள ஒப்புதல் அளித்திருந்தார். தற்போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாது என்று மாநில அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது.

தீபிகா கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். இதனால் தங்கள் மாநில பிரஞையை பாதுகாக்குமாறு கர்நாடக அரசு மற்ற மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பி இருப்பதாக மாநில அரசு வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதற்கிடையில் நடிகர்கள் கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ், ஷாருக்கான், அமீர்கான் உள்ளிட்ட பலர் தீபிகாவுக்கு ஆதரவும், ஆறுதலும் தெரிவித்துள்ளனர்.

Advertisement
தயாரிப்பாளர் தற்கொலை : அறிக்கையோடு இல்லாமல் தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா ?தயாரிப்பாளர் தற்கொலை : அறிக்கையோடு ... தமிழுக்கு வருகிறார் ரெபே மோனிகா தமிழுக்கு வருகிறார் ரெபே மோனிகா


வாசகர் கருத்து (7)

sivan - Palani,இந்தியா
24 நவ, 2017 - 15:30 Report Abuse
sivan இந்த பெண்மணி ஒன்றும் கைநாட்டு இல்லை. படித்தவர்தான். சித்தூர் பதமினி கில்ஜியின் கையில் மாட்டாமல் தற்கொலை செய்தது நாமெல்லாம் அறிந்த பாடப் புத்தக வரலாறு. இவருக்கு மட்டும் தெரியாதாகும்?? காசு கொடுத்தால் ராணி மங்கம்மாள் அவுரங்கசீப்புடன் டான்ஸ் ஆடினார் என்று கூட நடிப்பார். நம்ம ஊர் ராணி மங்கம்மாவை பற்றி தப்பாக பன்சால் படம் எடுத்தால் தான் நம் மக்களுக்கு இது எவ்வளவு பெரிய அபத்தம், அபாண்டம் என்று தெரியும்.
Rate this:
kaipullakunjumani - chennai,இந்தியா
22 நவ, 2017 - 18:55 Report Abuse
kaipullakunjumani காசுக்காக அவுத்துப்போட்டு நடிக்கும்போது யோசித்து இருக்கணும்.
Rate this:
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
22 நவ, 2017 - 17:46 Report Abuse
கதிரழகன், SSLC இந்தம்மா பாவம் ஒரு பொம்மை. எழுதி கொடுத்ததை படிப்பாக அம்புடுதேன். இவிங்கள ஒண்ணும் செய்ய கூடாது. இந்த படம் எடுக்க காசு போட்ட தயாரிப்பாளருக்கு நஷ்டம் உண்டாக்கணும் அம்புடுதேன். அடிக்கிறேன் கொல்லுவேன்ன்னு சொன்ன நம்ம பக்க நியாயம் அடிபட்டு போயிடும். கருத்து சுதந்திரம் முக்கியமினுன்னு சொன்னவங்க எல்லாரையும் "சாத்தானின் கவிதைகள்" புத்தகத்துக்கு தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கணும்.
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
22 நவ, 2017 - 16:15 Report Abuse
Aarkay No loss if she doesn't participate in the investors' meet. State governments have better things to do than giving protection to her.
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
22 நவ, 2017 - 16:13 Report Abuse
Aarkay ivar
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Sandi Muni
  • சண்டி முனி
  • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
  • நடிகை : மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
  Tamil New Film Rajabheema
  • ராஜபீமா
  • நடிகர் : ஆரவ்
  • இயக்குனர் :நரேஷ் சம்பத்
  Tamil New Film Billa Pandi
  • பில்லா பாண்டி
  • நடிகர் : ஆர் கே சுரேஷ்
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :சரவண சக்தி
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in