ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தீபக் ஷிவ்தாசனி இயக்கத்தில், ராய் லட்சுமி, ரவி கிஷன் மற்றும் பலர் நடிக்க ஹிந்தியில் உருவாகியுள்ள படம் 'ஜுலி 2'. இப்படம் வரும் 24ம் தேதி தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது. மிகவும் கவர்ச்சிகரமாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு தணிக்கைத் துறை 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தின் போஸ்டர்கள் அனைத்திலுமே ராய் லட்சுமி மிகவும் கிளாமராக இருக்கிறார்.
இப்படத்தை தணிக்கைத் துறையின் முன்னாள் தலைவராக இருந்த பஹ்லஜ் நிஹாலனி இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர். படம் பற்றி சமீபத்தில் பேசிய அவர் 'ஜுலி 2' ஒரு தென்னிந்திய நடிகையின் உண்மைக் கதை என்றார். ஆனால், அந்த நடிகை யார் என்பதை அவர் சொல்ல மறுத்திருக்கிறார்.
“அந்த நடிகை 'கான்' நடிகர் ஒருவரின் ஹிந்திப் படம் மூலமாகத்தான் நடிகையான அறிமுகமானார். அதன் பின் தென்னிந்தியா பக்கம் வந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்தார். 90களில் அவரும் முக்கியமான நடிகையாக விளங்கினார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகராக விளங்கிய திருமணமான நடிகர் ஒருவருடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்ட காரணத்தால் அவர் தென்னிந்தியத் திரையுலகை விட்டு விலகினார். அதன் பின் போஜ்புரி மொழியில் நடிக்க ஆரம்பித்து அங்கும் முன்னணி நடிகையாக விளங்கினார். அங்கும் ஒரு நடிகருடன் அவருக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. அவர் எங்களது படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்,” என்று தெரிவித்துள்ளார்.
அந்த நடிகையின் கதாபாத்திரத்தில் தான் ராய் லட்சுமி நடித்துள்ளார். அந்த நடிகை யார் என்பது குறித்து படத்தின் தயாரிப்பாளரே சஸ்பென்ஸ் வைத்து சொல்லாமல் விட்டுவிட்டார். அவர் யார் என்பதை வெளிப்படையாகச் சொல்லி படத்திற்கு எந்த சிக்கலும் வரக் கூடாது என நினைக்கிறாராம். இருந்தாலும் நாம் தரும் ஒரு சிறிய 'க்ளூ', அந்த நடிகையின் தங்கை தமிழ்நாட்டு மருமகள்.