மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
பவன் கல்யாண் நடித்து வரும் 25வது படம் அக்னதாவாசி. திரிவிக்ரம் இயக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், அனு இம்மானுவேல் உள்பட பலர் நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் சிங்கிள் டிராக் பாடல் ஒன்று வெளியாகி அனிருத்திற்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு ஓப்பனிங்கை ஏற்படுத்திக்கொடுத்தது.
இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு வாரணாசியில் தொடங்கியிருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 10ந்தேதி திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தின் தலைப்பினை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதனால் வாரணாசியில் படப்பிடிப்பு நடைபெறும் போதே நவம்பர் 27-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் இயக்குனர் திரிவிக்ரம். படத்தின் தலைப்புடன் பர்ஸ்ட் லுக்கையும் வெளியிடுகிறார்கள்.