பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
48வது சர்வதேச இந்தியத் திரைப்பட விழா நேற்று கோவாவில் ஆரம்பமானது. நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் ஸ்ரீதேவி, ஷாரூக்கான், ஷாகித் கபூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கு வந்த அனைவரையும் வரவேற்று ஸ்ரீதேவி உரையாற்றினார்.
நேற்று பல திரைப்பிரபலங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் விழாவில் கலந்து கொண்ட அனைவரது பார்வையும் ஸ்ரீதேவி மற்றும் அவரது மகள் ஜான்வி மீதே இருந்தது. ஸ்ரீதேவி பொன்னிற பட்டுப் புடவையிலும், அவரது மகள் ஜான்வி லெஹன்கா - சோளி உடையிலும் ஜொலிக்கும்படியாக வந்திருந்தனர். நுழைவாயிலில் குடும்ப சகிதமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்தவர்களை புகைப்படக்காரர்கள் எடுத்துத் தள்ளினர்.
ஸ்ரீதேவியின் அழகைப் பற்றி சொல்லவே வேண்டாம். அவரது மகள் ஜான்வியும் இப்போதுதான் நட்சத்திரமாக ஜொலித்து நிற்கிறார் எனப் பலரும் பேசிக்கொண்டார்களாம். கரண் ஜோஹகர் தயாரிக்கும் 'தடக்' படத்தில் ஜான்வி கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். 2018ம் ஆண்டு ஜுலை மாதம் இப்படம் வெளியாக உள்ளது.