டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் |
தமிழ்த் திரையுலகத்தில் இன்னமும் திருமணம் ஆகாமல் இருப்பவர்களின் பட்டியலில் ஆர்யா, விஷால் இருவரும் முக்கியமானவர்கள். நடிகர் சங்கக் கட்டடம் கட்டிய பிறகுதான் திருமணம் என்பதில் விஷால் உறுதியாக இருக்கிறார். ஆர்யா, இப்போது திருமணத்திற்கு தயாராகிவிட்டாராம். அதனால், மணப்பெண் தேடுவதாக சற்று முன் ஒரு வீடியோ அறிவிப்பு ஒன்றை அவரது டுவிட்டர் மூலம் வெளியிட்டிருக்கிறார்.
அதில், “போன வாரம் ஜிம்முல நான் கல்யாணம் பண்றதா பேசிட்டிருந்த ஒரு விஷயம் வீடியோவா லீக் ஆச்சு. அதுல எனக்குத் தெரியாம என் பிரண்ட்ஸ் விளையாட்டுத்தனமா பண்ண விஷயம். ஆனா, அதுல பேசின எல்லா விஷயமும் உண்மை தான்.
நான் கல்யாணத்துக்காக பொண்ணு தேடிட்டிருக்கேன். பொதுவா எல்லாருமே அவங்களோட லைப் பார்ட்னரை வந்து அவங்களோட வொர்க் பிளேஸ், பிரன்ட்ஸ், பேமிலி, ரிலேட்டிவ்ஸ் மூலமா தேடிப்பாங்க. இல்லனா, மேட்ரிமோனியல் சைட்ஸ்.
ஆனா, நான் அப்படியில்லங்க. எனக்குப் பெரிய டிமான்ட்ஸோ, கன்டிஷன்ஸோ கிடையாது. உங்களுக்கு என்னை பிடிச்சிருந்தா, நான் உங்களுக்கு ஒரு நல்ல லைப் பார்ட்னரா இருப்பன்னு நீங்க நினைச்சிங்கன்னா, 73301 73301 நம்பருக்கு கால் பண்ணுங்க.
இது வந்து பிரான்க் இல்ல ஜோக், இல்லை விளையாட்டுத்தனமா பண்றன்னு நினைச்சிக்காதீங்க, இது என்னோட லைப் மேட்டர், இந்த நம்பருக்கு தயவு செஞ்சி கால் பண்ணுங்க, உங்களுக்காகக் காத்திருக்கிறேன்,” என அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
ஆர்யாவின் இந்த வித்தியாசமான பெண் தேடும் படலம் பற்றி நிச்சயம் பரபரப்பு உருவாகும்.