அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ஜெயம் ரவி நடித்து வரும் டிக்:டிக்:டிக் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டிரைலரை நவம்பர் 24 அன்று வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். மிருதன் படத்தை இயக்கிய சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் இது.
ஜெயம் ரவிக்கு ஜோடியாக, நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். ஜெயம் ரவி மகன் ஆரவ் முக்கிய கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். இமான் இசையமைத்து வரும் இப்படம் முழுக்க விண்வெளியை மையப்படுத்தி தயாராகும் முதல் த்ரில்லர் படம்.
பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து அதற்குள் க்ரீன்மேட் அமைத்து இப்படத்தின் 75 சதவிகித படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ஹிதேஷ் ஜபக் தயாரித்துள்ள இந்தப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கி தமிழகம் முழுக்க வெளியிடுவதாக இருந்தது.
ஆனால் இப்போது வெளியாகி டிரைலர் அறிவிப்பு போஸ்டரில் தேனாண்டாள் பிலிம்ஸ் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அந்த நிறுவனம் படத்தை வெளியிடவில்லை, எனவே தயாரிப்பாளரே இந்தப்படத்தை வெளியிடுகிறார் என்று கூறப்படுகிறது. இந்த தகவலை சம்பந்தப்பட்ட பட நிறுவனம் தான் உறுதி செய்ய வேண்டும்.