பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
பள்ளி மாணவர்களுக்கு பாலியல் குறித்த விழிப்புணர்வு ஏற்பட பாலியல் கல்வி அவசியம். எனவே பள்ளிகளில் பாலியல் கல்வி கற்றுத்தர வேண்டும். சமூக சேவை பணிகளில் ஈடுபடுவதால், அரசியலுக்கு வரப்போகிறேன் என்று நினைக்ககூடாது என த்ரிஷா கோரிக்கை வைத்துள்ளார்.
யுனிசெப் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்திற்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ள த்ரிஷா நேற்று அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:
யுனிசெப் தூதர் பதவியை பெருமையாக கருதுகிறேன். சினிமா எனக்கு நிறைய கொடுத்து இருக்கிறது. பதிலுக்கு இந்த சமூகத்துக்கு பணி செய்வதற்காகவே இந்த பொறுப்பை ஏற்றுள்ளேன். குழந்தைகள் கல்வி, நல்வாழ்வு, ஊட்டச்சத்து மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்.
ஊட்டச்சத்து குறைபாடற்ற, திறந்தவெளி மலம் கழித்தலற்ற தமிழகம் உருவாக்கும் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிப்பேன். 18 வயது வரை அனைத்து பெண் குழந்தைகளுக்கும் கல்வி அளிக்க வேண்டும். குழந்தை திருமணங்களை, குழந்தை தொழிலாளர்கள் முறைகளை தடுக்க பிரசாரம் செய்வேன்.
பருவ வயதை அடைதல் மற்றம் அது தொடர்பான விஷயங்களை பெண் குழந்தைகள் அச்சத்துடன் பார்க்கிறார்கள். "குட் டச் பேட் டச்" பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை. அதனால் குழந்தைகளுக்கு பாலியல் கல்வி அவசியம். எனவே பள்ளிகளில், மாணவ - மாணவிகளுக்கு பாலியல் கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டும். புத்தக படிப்பு தவிர மற்ற விஷங்களை கற்றுத் தர வேண்டும். கண்டிப்பாக ஒவ்வொரு பள்ளியிலும் நூலகம் இருக்க வேண்டும்.
சினிமாவில், குழந்தைகளுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. பள்ளி சீருடையில் மாணவ - மாணவிகள் காதலிப்பது போன்ற காட்சிகள் இருக்க கூடாது என்றும் வற்புறுத்தப்படுகிறது. சினிமா என்பது நிஜமல்ல, சினிமாவில் மாணவ - மாணவிகள் சீருடையில் காதலிப்பது போன்ற காட்சிகளை நகைச்சுவைக்காக வைக்கலாமே தவிர, அதை சீரியசாக காட்டக்கூடாது. பாலின ஈர்ப்பு என்பது ஹார்மோன்களின் வேலை என்பதை உணர்த்த வேண்டும்.
சமூக சேவை பணிகளில் ஈடுபடுவதால், அரசியலுக்கு வரப்போகிறேன் என்று நினைக்ககூடாது. அரசியல் பெரிய விஷயம். அதுபற்றி எதுவுமே எனக்குத் தெரியாது. அந்த மாதிரியான சிந்தனை எதுவும் இல்லை.
இவ்வாறு த்ரிஷா கூறினார்.