கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
'மெர்சல்' படம் அனேகமாக கடைசி வார ஓட்டத்தில் இருக்கிறது என்றே சொல்லலாம். ஒரு சில தியேட்டர்களைத் தவிர பெரும்பாலான தியேட்டர்களில் இந்த வாரத்துடன் படத்தை எடுத்து விட வாய்ப்புகள் அதிகம். தமிழ்நாட்டில் 120 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ள படம் வெளிநாடுகளில் 100 கோடி வசூலைத் தாண்டுமா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றுடன் முடிவடைந்த வசூலில் வெளிநாடுகளில் 15 மில்லியன் டாலர்களை 'மெர்சல்' படம் வசூலித்துள்ளதாகத் தெரிகிறது. ரூபாய் மதிப்பில் 97 கோடி வரை வசூலாகியுள்ளது. வெளிநாடுகளில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் கடந்த வாரத்துடன் படத்தை எடுத்துவிட்டார்கள். ஒரு சில நாடுகளில் சில தியேட்டர்களில் மட்டுமே வார இறுதிக் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால் வெளிநாடுகளில் 100 கோடி ரூபாய் வசூலைப் பெறுவதில் வாய்ப்புகள் குறைவுதான்.
வெளிநாடுகளில் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிய படங்கள் பட்டியலில் “எந்திரன், சிவாஜி, சிங்கம் 2, துப்பாக்கி, தசாவதாரம்'' ஆகிய படங்கள் உள்ளன. அந்தப் படங்களின் பட்டியலில் 'மெர்சல்' இடம் பெறுவது சிலபல கோடிகள் வித்தியாசத்தில் நிறைவேறாமல் போய்விடும் போலவே தெரிகிறது.
ஒட்டு மொத்தமாக மொத்த ஓட்ட முடிவில் உலக அளவில் 'மெர்சல்' படம் 250 கோடியைக் கடக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.