வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
விஜய் சேதுபதிக்குப்பிறகு சரியான கதையை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர். தனக்கு ரொமான்ஸ், காமெடி சரியாக வராது என்பதை புரிந்து கொண்டு சீரியசனாக கதைகளாக செலக்ட் பண்ணி நடித்து வருகிறார். அப்படி அவர் நடிக்கும் ஒவ்வொரு படங்களுமே வசூல்ரீதியாக வெற்றி பெற்று விஜய் ஆண்டனியின் சினிமா மார்க்கெட்டை உயர்த்தி வருகின்றன.
இந்த நிலையில், தற்போது அவர் நடித்துள்ள அண்ணாதுரை படம் நவம்பர் 30-ந்தேதி திரைக்கு வருகிறது. புதுமுக இயக்குனர் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ள இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் விஜய் ஆண்டனி ஒரு வேடத்தில் காதல் தோல்வியால் குடிகாரனாகி விடும் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த வேடத்திற்கு செண்டிமென்ட் காட்சிகளும் அதிகமாக உள்ளது. அதனால் பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு இந்த படத்தின் காதல் செண்டிமென்ட் காட்சிகள் தனக்கு ரசிகர்கள் மத்தியில் இன்னொரு அழுத்தமான இடத்தை பிடித்துத்தரும் என்று எதிர்பார்க்கிறார் விஜய் ஆண்டனி.