‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பெரிய நட்சத்திரங்களின் படங்கள், பெரிய பேனர் தயாரிப்பில் உருவாகும் படங்கள் ஆகியவற்றின் டிவி உரிமை என்பது எப்போதுமே நல்ல விலைக்கு விற்கப்படுவது வழக்கம். சிலர் படம் வெளிவருவதற்கு முன்பே பணத் தேவைக்காக பெரிய விலை இல்லை என்றாலும் அவர்களுக்குத் திருப்தியான விலைக்கு விற்றுவிடுவார்கள். சிலர் என்னதான் கஷ்டம் இருந்தாலும் படத்தின் மீது நம்பிக்கை வைத்து படம் வெளியாகி வெற்றி பெற்ற பின் அதிக விலைக்கு விற்கலாம் என்று ஆசைப்படுவார்கள். அப்படி ஆசைப்படுபவர்களின் ஆசை, பின்னர் நிராசையாகப் போன கதைகள் நிறைய உண்டு.
'இப்படை வெல்லும்' என படத்தின் டைட்டிலில் மட்டும் வெற்றி என்பதைக் குறிக்கும் விதத்தில் வைத்து படத்தில் அப்படிப்பட்ட அம்சங்கள் எதுவும் இல்லாமல் வெளிவந்து தோல்வியடைந்த படம் 'இப்படை வெல்லும்'. இப்படத்தைத் தயாரிப்பு தரப்பு பெரிய வெற்றி என பொய் விளம்பரப்படுத்தி வருகிறது. ஆனால், படத்தை வாங்கியவர்களுக்கு சுமார் 60 சதவீதம் வரை நஷ்டம் வரும் என்று சொல்கிறார்கள்.
அது மட்டுமல்ல, பட வெளியீட்டிற்குப் பின் சாட்டிலைட் டிவி உரிமை கொடுத்துவிடலாம் என்று இருந்தார்களாம். ஆனால், படம் தோல்வியடைந்ததால் இப்போது யாருமே வாங்க முன்வரவில்லையாம். என்னதான் கோடிகளில் பணம் இருந்தாலும் தொடர் தோல்வி என்பது ஒரு நிறுவனத்திற்கு இமேஜை டேமேஜ் செய்யும் விஷயம் என்பதை அந்தத் தயாரிப்பு நிறுவனம் எப்போது உணரும் என்று கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.