தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டைரக்டர் பிரியதர்ஷன், நடிகர் அபிஷேக் பச்சனை வைத்து காமெடி படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளாராம். இப்படத்திற்கு பச்சன் சிங் என பெயரிடப்பட்டுள்ளதாம். இத்தகவலை டைரக்டர் பிரியதர்ஷன் உறுதி செய்துள்ளார்.
இது குறித்து பிரியதர்ஷன் கூறுகையில், அபிஷேக் பச்சனை வைத்து படம் ஒன்றை இயக்க முடிவு செய்து, அவரிடம் பேசி உள்ளேன். அபிஷேக், அவரது அப்பா அமிதாப் பச்சன் போன்று நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர். எனது படத்திற்கு அவர் மிகவும் பொறுத்தமானவராக இருப்பார். என் படத்தில் நடிக்க அவர் ஒப்புக் கொள்வார் என நம்புகிறேன்.
எப்போதும் எனது முதல் தேர்வும் அவர் தான். அடுத்து ஆண்டு ஜனவரி மாதம் எனது படத்தின் படப்பிடிப்புக்களை துவக்க உள்ளேன் என்றார். அபிஷேக், இதற்கு முன் 2016 ல் வெளியான ஹவுஸ்புல் 3 என்ற முழுநீள காமெடி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.