டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
புதுச்சேரியை சேர்ந்த ஒரு பெண் சுடுகாட்டில் வெட்டியானாக வேலை செய்வது பற்றிய செய்திகள் சமீபத்தில் வெளிவந்தது. இயக்குனர் லீனா மணிமேகலை அந்த பெண்ணைப் பற்றி ஆவணப்படம் ஒன்றையும் உருவாக்கினார். இப்போது அந்த பெண்ணின் வாழ்க்கையை தழுவி கற்பனை கலந்து ஆறடி என்ற படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
ஒரு பெண் வெட்டியான் வேலை செய்தால் சமூதாயத்தில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதுதான் கதை. அந்த பெண்ணுக்கும் அவரை பேட்டி எடுக்க வரும் பத்திரிகையாளருக்கும் வருகிற காதல். அதன் மூலம் வருகிற பிரச்சினைகளும் பேசப்படுகிறது. விஜயராஜ், தீபிகா ரங்கராஜ், ஜீவிதா, டாம்பிராங், சாப்ளின்பாலு உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர்.கே.விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார், அபிஜோஜோ இசை அமைத்துள்ளார். சக்திவேல் இயக்கி உள்ளார்.
சமீபத்தில் இதன் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. திரையுலக முன்னணியினர் கலந்து கொண்டு இந்த புதிய முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தனர்.