இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத் நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் நேற்று தமிழ், தெலுங்கில் வெளியானது. இரண்டு மொழிகளிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தில் கார்த்தியின் நடிப்பைப் பாராட்டுபவர்கள் கூடவே படத்தின் நாயகியாக ரகுல் ப்ரீத்தின் நடிப்பையும் பாராட்டி வருகிறார்கள்.
படத்தில் +2 பெயிலான பெண்ணாக நடித்திருக்கிறார் ரகுல் ப்ரீத். பாடப் புத்தகங்களுக்கு நடுவில் காமிக்ஸ் புத்தகங்களை வைத்துப் படிக்கும் குறும்புத்தனமான பெண் கதாபாத்திரம். இப்படிப்பட்ட குறும்புத்தனமான கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகளை தமிழ் ரசிகர்களுக்கு உடனே பிடித்துவிடும். அதிலும் இந்தப் படத்தில் அந்தக் கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத்தின் நடிப்பு அவ்வளவு யதார்த்தமாக அமைந்துள்ளது.
இதற்கு முன் ரகுல் ப்ரீத் நடித்து வெளிவந்த 'ஸ்பைடர், புத்தகம், என்னமோ ஏதோ' ஆகிய படங்கள் தோல்விப் படங்களாக அமைந்ததால் ரகுல் ப்ரீத், தமிழைப் பொறுத்தவரையில் ராசியில்லாத நடிகையாகவே இருந்தார். இப்போது 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் வெற்றி அவரை ராசியில்லாத நடிகை என்று சொல்லப்பட்டதிலிருந்து நடிக்கத் தெரிந்த நடிகை என்று மாற்றிவிட்டது.