'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸின் 100வது படமாக விஜய் நடித்த மெர்சல், தீபாவளிக்கு வெளிவந்தது. அட்லீ இயக்கிய இந்தப்படம் ஜிஎஸ்டி சர்ச்சையில் சிக்கி மெகா ஹிட்டடித்தது. இதையடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் ஜெயம்ரவி - ஆர்யா நடிக்கும் சங்கமித்ரா என்ற பிரமாண்ட படத்தை அந்நிறுவனம் தயாரிக்கிறது. ஆனால் அது எப்போது ஆரம்பிக்கும் என்றே தெரியவில்லை.
இந்த நிலையில், அடுத்தபடியாக தனுஷை வைத்து ஒரு படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இதை இந்நிறுவனத்தின் ஹேமா ருக்மணி டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். விஜய்யைத் தொடர்ந்து மல்டி டேலண்ட் ஆர்ட்டிஸ்ட் தனுஷை வைத்து ஒரு படம் தயாரிக்கிறோம். படம் பற்றிய மற்ற விபரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவித்திருக்கிறார்.