ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கைதி எண் 150 படத்தை அடுத்து சிரஞ்சீவி நடிக்கும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. ஆந்திராவைச்சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நிரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு கதையில், பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகிறது. சுரேந்தர் ரெட்டி இயக்கும் இப்படத்தில், சிரஞ்சீவியுடன் அமிதாப்பச்சன், சுதீப், விஜயசேதுபதி, நயன்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 6-ந்தேதி முதல் தொடங்கயிருக்கும் நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஒரு டெஸ்ட் ஷூட் நடத்தியிருக்கிறார் சிரஞ்சீவி. ஐதராபாத்திலுள்ள அலுமினியம் தொழிற்சாலையில் நடந்திருக்கிறது. அப்போது டிசம்பர் 6-ந்தேதி முதல் தான் நடிக்கயிருக்கும் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் கெட்டப்பில் ஓரிரு முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை ரிகர்சல் பார்த்திருக்கிறார் சிரஞ்சீவி. இந்த டெஸ்ட் ஷூட்டே படப்பிடிப்பு போன்று பிரமாண்டமாக நடைபெற்றிருக்கிறது.