மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் |
பாகுபலி-2 படத்திற்கு பிறகு அனுஷ்கா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் பாக்மதி. இந்த படத்தில் அனுஷ்காவுடன் ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷாசரத் என பலர் நடித்துள்ளனர். இப்படி பல மலையாள நட்சத்திரங்கள் நடித்திருப்பதால் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் இந்த படம் வெளியாகிறது.
பாகுபலியைப் போன்று இந்தப்படத்திலும் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இடம்பெறுவதால் இறுதிகட்ட பணிகளே பல மாதங்களாக நடந்து வந்த நிலையில், ஜனவரி மாதம் சங்கராந்திக்கு பாக்மதியை வெளியிட திட்டமிட்டனர். ஆனால் அதே நாளில் தெலுங்கில் பாலகிருஷ்ணா, பவன்கல்யாண் நடித்த படங்கள் வெளியாவதை அடுத்து சங்கராந்தி ரேஸில் இருந்து விலகியது. இப்போது ஜனவரி 26-ந்தேதி குடியரசு தினத்தில் பாக்மதி திரைக்கு வருவதாக அறிவித்துள்ளனர்.